எனக்கு விஜய் பிடிக்கும் என்றாள்

சீர்தூக்கி பார்க்கும் உன் 
கூரிய அறிவு பிடிக்கும்
உள்ளத்தில் உள்ளவைகளை
வெளிக்கொணரும் உன் மந்திர விழிகள் பிடிக்கும்
பேசும் பொழுதும் குறுநகை புரியும் உன் இதழ்கள் பிடிக்கும்
எவர்க்கும் அஞ்சா உன் நேர்மை பிடிக்கும்
சிறு குழந்தையாய் குதூகலிக்கும் உன்குறும்பு பிடிக்கும் 
இத்தனையும் சொல்லிமுடித்து
நீண்டநேர மௌனத்திற்கு பிறகு
உங்களைபோல் பிரித்து பிரித்து எனக்கு சொல்லதெரியாது
மொத்தமாய்
எனக்கு விஜய் பிடிக்கும் என்றாள்

Comments

Popular Posts