மழழைப்பருவம்

நீண்ட தூர பிரயாணத்தில்
சன்னலோர இருக்கை
பல வருட தேடலுக்குப்பின்
கிடைக்கும் முதல் மாத சம்பளம்
புதிய உடை - சிறு குழந்தையின் குறும்பு
இவை அனைத்திலும் ஒளிந்தும்
மறைந்தும் வாழ்கிறது - நாம்
தொலைத்து இழந்துவிட்டதாக
மறுகி உருகும்
நம் அனைவரின் மழழைப்பருவம் 

Popular Posts