என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
இயற்கையின் உத்தரவுப்படி
நரை தரித்து மூப்பெய்தி இருப்பாய்
என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
தன் மனை ,தன் மக்களென ஓடிக்களைத்திருப்பாய்
என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
உன் மக்களுக்கு
பிறன் மனை நோக்கிய இதிகாசத்தையோ
சூதாடி நாடு இழந்த இதிகாசத்தையோ
சொல்லிக்கொண்டிருப்பாய் - நம்
இளமைக்கால வசந்தம் தவிர்த்து
என்னைப்போலவே

Popular Posts