சார்

சார்

இந்த வார்த்தைய கேட்கும் போது வேற யாரையோ கூப்டுறாங்க ,அப்டின்னு பேசாமா நான் பாட்டுக்கு டீய குடிச்சிக்கிட்டு இருந்தேன் .திரும்பவும் சார்னு சத்தம் கேட்கவும் பின்னாடி யாரும் நிக்கிறாங்களான்னு திரும்பி பார்த்தேன் .யாரும் இல்ல .
நம்மள யார்ரா சார்னு இவ்ளோ மரியாதையா கூப்டுராங்கன்னு பார்த்தா ,அது டீ மாஸ்டர் .அனேகமா அவர்
வேற ஏரியாக்காரர்னு  நினைச்சுகிட்டு ,சொல்லுங்க என்றேன் .

அவர், உங்களுக்காக தான் கார் ரொம்ப நேரமா நிக்கிது அப்டின்னு சொல்லிட்டு ,ஆமா நீங்க எங்க வேலை செய்யுறீங்கனு கேட்டார் .
நான் கால் சென்ட்டர்ல வேலை செய்யுறேன். அப்டின்னேன் .என்ன புரிஞ்சதோ ,சரினு  சொல்லிட்டு
நீங்க வேல செய்யுற இடம்லாம் full Ac ஆ சார்னு கேட்டார் .ஆமாம்னேன் .

அவருக்கு ஏதோ அப்படி இருந்தா ரொம்ப பெரிய வேலைன்னு எண்ணம் போல .
பிறகு  தான் அந்த கொடூரமான கேள்வியை  கேட்டார் .உங்களுக்கு எல்லாம் எவ்வளவு  சம்பளம் இருக்கும்னு .
நான் சுதாரிக்கிற நேரம் இது .

மனசுல "நீங்க திருச்சில இந்த கம்பெனிய ஏன் ஆரம்பிச்சிங்கன்னு நான் கேட்டதுக்கு cheap Labour ன்னு என்னோட பெங்களூர் trainer சொன்னது நினைவுல வந்து போச்சு .

நானும் சிரிச்சுகிட்டே அப்புறம் நீங்க எந்த ஏரியான்னு பேச்ச மாத்திட்டு சரி dutyக்கு நேரம் ஆச்சுன்னு சொல்லிட்டு escape ஆகிட்டேன் .

அப்புறம்  கம்பெனில ஒரு customera கெட்ட வார்த்தைல திட்டிட்டேன்னு சொல்லி வேலைய விட்டு தூக்கிட்டாங்க .

ஒருநாள் டீ குடிக்க திரும்ப அந்த கடைக்கு போகும்போது அதே டீ மாஸ்டர் இருந்தார் .நான் சிரிக்கலாம்ன்னு நினைக்குறதுக்கு முன்னாடி "இப்பலாம் கார் வர்றது இல்ல போல ?அப்டினார் .இப்ப சார்னு கூப்டலங்கிறத மனசுல வச்சுக்கிட்டு நான் இப்ப வேற shift மாறிட்டேன்ன்னேன் .
வேலை இருந்தா தானே pickup பண்ண கார் வரும் .

கொஞ்ச நாள் போச்சு .அதே டீ மாஸ்டர் "ஏண்டா நீ வேலைக்கு போறது இல்லையாடா  அப்டின்னார் .
நானும் வேற வழி இல்லாம மெட்ராஸ்ல வேல கிடைச்சுருக்குன்னு சொல்லிட்டு வேகமா கிளம்பி வந்துட்டேன் .

 சார் ,நீ போ ஆகி ,போடா வாடால வந்து நின்னுச்சு .ஏண்டா நானாட உங்களை சார்னு கூப்ட சொன்னேன் .

அதனால மக்களே ,இனிமே உங்கள யாரும் சார்னு கூப்ட்டா கொஞ்சம் உஷாரா இருங்க. ஏன்னா எப்ப வேணா உங்கள போடா வாடான்னு கூப்ட வாய்ப்பு இருக்கு .

அதோடு சார்ங்கிறத வெள்ளைக்காரன் பயன்படுத்துனதுனாமே .அதனால சார் வேணாம் .நாம இந்தியனாவே இருப்போம் .




Comments

Popular Posts