உலகிற்கான புத்தம் புதிய மழை

இன்றும் பெய்து கொண்டிருக்கிறது
உலகிற்கான புத்தம் புதிய மழை - ஆனால்
நம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து
அறியா வயதில்
எவரும் புரியா மொழியில்
பேசிச்சிரித்து
செல்லமாய் சிறை பிடித்தும்
பெருந்தன்மையாய் விடுவித்தும்
விளையாடிய அப்பெரும் சமுத்திர மழையைப்போல்
அத்துனை சிறப்பானதொன்றும் இல்லை


Popular Posts