கொடியவன்

கூரிய கொடுவாளால் எனை
துண்டு துண்டாக வெட்டிப்போடுங்கள்
அரிதினும் அரிதான மெல்லிய குண்டூசியால்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
குத்தி குத்தி
உயிர் வலி உண்டாக்குங்கள் -ஏனெனில்
என்னிலும் கொடியவன்  உலகில் எங்கும் இல்லை -அதற்க்கு முன்
ஆள் உயர ஆடியில்
உங்களை ஒரு முறை உற்று நோக்குங்கள் - ஏனெனில்
உங்களின் பிரதி பிம்பம் தான் நான்

Popular Posts