நூல் அறிமுகம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வரலாறு உண்டு .எனினும் இந்த காலம் வரை நாம் வரலாறு என்று படித்தும் தெரிந்து, கொள்ள விழைவது ,அல்லது தெரிந்து கொண்டது நமை ஆண்ட மன்னர்களின் வரலாறோ அல்லது நம் நாட்டின் வரலாறு பற்றியதோகவாகத்தான் இருக்கிறது .
சேர சோழ பாண்டிய வரலாறு ,துரோக வரலாறு இப்படி .
எந்த ஒரு எளிய மனிதனை பற்றியும் தெரிந்து கொள்ள நாம் நினைத்தது  இல்லை .இன்றும் அந்த அரசுகள் எல்லாம் இல்லாத போதும் ,இந்த ஜனநாயக நாட்டிலும் ஆண்ட வரலாறு என்பதையே தான் தேடிக்கொண்டு இருக்கிறோம் .

எந்த சூழ்நிலையிலும் ஒரு அடிமையை பற்றியோ ,அவன் எப்படி அடிமையாக மாறினான் என்பது பற்றியோ எந்த வரலாற்றையும் நம்முடைய இலக்கிய உலகம் நமக்கு அறிமுகப்படுத்தியதாகவோ நினைவில் இல்லை .
இருப்பினும் முன் சொன்னது போல் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வரலாறு என்பது இருந்தே வந்திருக்கிறது .
அவனுக்கு என்று ஒரு கலாச்சாரமோ ,பண்பாடோ ,மொழியோ இருக்கிறது .அவனைப்  பற்றிய  தேடுதலில் ஒரு நாவல் எழுதப்பட்டு இருக்கிறது .
நான் சொல்வது இந்திய சமூகத்தில் உள்ள நூலைப் பற்றி அல்ல .

ரூட்ஸ் ( Roots )  என்னும் ஒரு நாவல் அலெக்ஸ் ஹேலி என்னும் நாவல் ஆசிரியரால் எழுதப்பட்டு ,ஆப்ரிக்க கறுப்பின அடிமை மக்களின் வரலாற்றைப் பற்றி பேசுகிறது .
ஒரு மனிதன் எவ்வாறு அடிமையாக்கப்பட்டான் ,அவனுடைய சந்ததியினர் எவ்வாறு எல்லாம் துன்பப்பட்டார்கள் ,அந்த அடிமைச்  சமூகத்தில் இருந்து எவ்வாறு அவர்கள் மீண்டார்கள் என்று விரிவாகப் பேசுகிறது இந்த நாவல் .

இந்த நாவலின் தமிழாக்கம் ஏழு தலைமுறைகள் என்னும் தமிழ்ப்  படைப்பாக சிந்தன் புக்ஸ் என்னும் பதிப்பகத்தால் வெளி வந்து இருக்கிறது .

முடிந்தால் படித்துப் பாருங்கள்

Popular Posts