சிமிழ்

சிறிதும் பெரிதுமான
தனித்ததொரு அடையாளங்களுடன்
வெவ்வேறு சிமிழ்களில்
பால்ய காலம் தொட்டு
இன்று வரையுள்ள அந்தரங்கங்களை
அடைத்து அடைகாக்கிறேன் -இருந்தும்
பெரியதொரு சிமிழை
படைத்துக்காத்திருக்கிறேன்
அடங்கி மரிப்பதற்கும்
எனதான இரகசியங்களை
புதைப்பதற்கும்


Comments

Popular Posts