நான் - கவிதை

மருண்ட விழிகளுடன்
உயிர் பயம் தெரியும்
பலி ஆடுகளின் கண்களை உற்று நோக்கி இருக்கிறீர்களா -ஊர் பொது இடத்தில்
தான் நம்பியவனால்  வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்மையை
எங்கேனும் கண்டு இருக்கிறீர்களா -இன்னும்
எதிர் வினை ஆற்றமுடியா அப்பாவிகளை
அழித்தொழிக்கும் நரன்களை கண்டு இருக்கிறீர்களா
இது போன்றதொரு சூழலில் என் செய்வீர்கள் - நான்
சிறப்பான ஒரு வார்த்தையை தேடித்  தேடி கவிதை சமைப்பேன் 

Popular Posts