வாழிய சென்னை

இரு கரை பெருகி வரும்
பெரும் புனலில்லை
அக்காலப் பெண்ணைப்போல்
தலை கவிழ்ந்த நெற்பயிர் இல்லை
ஊருக்கு உணவளித்த விவசாயியின்
தலை வாழை இலை விருந்தில்லை - நான்
என் ஊரில் அனுபவித்த எதுவுமே இங்கில்லை
இருப்பினும்
உன்னை நான் நேசிக்கிறேன் - ஏனெனில்
பொழப்பு கொடுத்த ஊர்
கும்புடுற குலசாமிய விட மேல் 

Comments

Popular Posts