நல்லவன்

ஏற்றுக்கொண்ட பெருஞ்சுமையை
எனதில்லையென
கைகழுவி இருக்கிறீர்களா
ஆபத்துக்காலத்தில் அபயம் என
கேட்டவரை முகம் திருப்பி
புறக்கணித்திருக்கிறீர்களா
நீ மட்டுமே உலகம் என எண்ணியவரை
வெறுத்து
புறந்தள்ளி இருக்கிறீர்களா
சந்தேகம் வேண்டாம் -நீங்கள்
நல்லவன் என்று நம்பிக்கொண்டு
இருப்பவர் தான் 

Comments

Popular Posts