கொலையின் ருசி

கொலையின் ருசி அறிந்திருக்கிறீர்களா நீங்கள்
தலை துண்டிக்கப்பட்டு பீறிட்டு எழும்
குருதியைக் கண்டு குதூகலித்து இருக்கிறீர்களா - அவை
குளிர் மார்கழியில்
உச்சந்தலையில் சிறு நீர்த்துளி கொண்டு
குளித்ததைப் போன்று உணர்வீர்கள் 
உயிர் பயம் கொண்டு மருண்ட பார்வையை
நேர்கொண்டு ரசித்து இருக்கீர்களா - அவை
பல ஆயிரம் குறைகளை சடுதியில் புறந்தள்ளும்
கடவுளைப்போல் உணர்வீர்கள் நீங்கள்
உயிருக்குப்  போராடும்
அந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்து இருக்கீறீர்களா -அவை
உலகை ரட்சிக்க வந்த மமதை கொண்ட
தேவ தூதனாகவே உணர்வீர்கள் - இத்தனையும் படித்து
இத்துணை கொடியவனா நீ எனும் கேள்விக் கூர்வாள் நீட்டும் உங்களிடம்
ஒன்று மட்டும் சொல்வேன்
மிக நெருங்கியவரின் மனங்களை
சடுதியில் புறந்தள்ளும் உத்தமனனான
உங்கள் செயலை விட
கொலை ஒன்றும் அத்துனை கொடியதன்று






Comments

Popular Posts