பைத்தியக்காரன்

கண்ணுக்குத்தெரியா தூரிகை கொண்டு
வானத்தை கீலும்
பூமியை மேலும்
நீரைத் திடமாகவும்
காற்றை திரவமாகவும்
வழக்கு மாற்றி மாற்றி
வரைந்து குதூகளிக்கிறான் - நாளைய மனிதன் பற்றி கேட்கவும்
வளர்ச்சித் திட்டம் என பலவாறு கிறுக்கிக்களைத்தவன்
வெற்று வனாந்தரத்தை கோடிட்டு காட்டி
இறுதியில் கல்லறையில் முடித்தான்
எவரும் அறியா அந்த பைத்தியக்காரன்

Comments

Popular Posts