என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
இயற்கையின் உத்தரவுப்படி
நரை தரித்து மூப்பெய்தி இருப்பாய்
என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
தன் மனை ,தன் மக்களென ஓடிக்களைத்திருப்பாய்
என்னைப்போலவே

இன்னும் சில ஆண்டுகளில்
உன் மக்களுக்கு
பிறன் மனை நோக்கிய இதிகாசத்தையோ
சூதாடி நாடு இழந்த இதிகாசத்தையோ
சொல்லிக்கொண்டிருப்பாய் - நம்
இளமைக்கால வசந்தம் தவிர்த்து
என்னைப்போலவே

Comments

  1. இதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறதோ?
    அதுவும் ஒரு அழகுதான்.
    மனம் விட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  2. நல்ல தேர்ந்த நடை!!
    அருமை சகோ!!
    செட்டிங்க்ஸ் போய் comment moderation என்பதை no அல்லது disable பண்ணுங்க சகோ! அப்போ தான் மத்தவங்க கருத்துச்சொல்ல ஈஸியா இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி .இதுவரை நான் எழுதிய பதிவுகளை ,பள்ளிக்கூட மாணவன் மனப்பாடம் செய்து தனக்கு தானே ஒப்பிப்பதைப்போல் நான் மட்டுமே படித்து இருக்கிறேன் .இன்று உங்களால் மற்றவர்களின் கண்களிலும் தெரிந்து இருக்கிறேன் .மிக்க நன்றி .என் வாழ்நாளில் ஒரு முக்கியமான நாளாக இன்று அமைத்து கொடுத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி .

      Delete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  4. இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவைப் படித்தேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  5. வித்தியாசமான முறையில் நடப்பை சொன்ன கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ‘தளிர்’ சுரேஷ் அவர்களே

      Delete
  6. நன்றி Mythily kasthuri rengan

    ReplyDelete

Post a Comment

Popular Posts