மாயத்தூரிகையும் கடவுளும்
மாயத்தூரிகை கொண்டு
கால்கள் இரண்டு சிறகு இரண்டு என்று
அழகிய ஓவியம் வரைகிறார்
ஓர் அழகிய பறவை சிறகசைத்து
கையில் வந்தமர்ந்து சிறகு விரிக்கிறது -அடுத்து
பிடரி மயிருடன் ஓர் உருவம்
தாயும் சேயுமாய் சிங்கம்
கர்ஜித்து இறைதேடுகிறது - நீண்ட யோசனைக்குப்பின்
ஆறறிவுள்ள பகுத்தறிவாளன் - உடனே
அவசரமாய் அவ்வெண்ணத்தை
அழித்தொழிக்கிறார்
முதலுக்கு பங்கம் வரக்கூடாதென
கடவுள்
கால்கள் இரண்டு சிறகு இரண்டு என்று
அழகிய ஓவியம் வரைகிறார்
ஓர் அழகிய பறவை சிறகசைத்து
கையில் வந்தமர்ந்து சிறகு விரிக்கிறது -அடுத்து
பிடரி மயிருடன் ஓர் உருவம்
தாயும் சேயுமாய் சிங்கம்
கர்ஜித்து இறைதேடுகிறது - நீண்ட யோசனைக்குப்பின்
ஆறறிவுள்ள பகுத்தறிவாளன் - உடனே
அவசரமாய் அவ்வெண்ணத்தை
அழித்தொழிக்கிறார்
முதலுக்கு பங்கம் வரக்கூடாதென
கடவுள்
Comments
Post a Comment