உயர் நட்பு
முகநூலில்
தெரிந்தவர் தெரியாதவர்
அனைவர்க்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியாகிவிட்டது
பிடித்த கவிதை பிடிக்காத துணுக்கு அத்துணைக்கும்
விருப்பக்குறி இட்டாகிற்று
இனிமேல் தான்
உள்ளம் திறக்க
உண்மை மட்டும் பேச
தோள் சாய்ந்து கதறி அழ
ஓர் உயர்ந்த நட்பைத் தேட வேண்டும்
நிஜ உலகில்

Comments
Post a Comment