இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

எங்களுக்கு சொந்தமான பகுதியை
நாங்கள் அறியாமல் பிடுங்கிக் கொடுங்கள்
அயலான் தோட்டாக்களால்
துளைத்தெறியும்போழுது
நட்பு நாடு என்று உறக்கக் குரல் கொடுங்கள்
முப்போகம் விளைந்த எம்மண்ணை
பாலை ஆக்குங்கள்
மின்சாரம் ,மீத்தேன் ,நியுற்றினோ இன்னும் பிற 
விஞ்ஞானம் என்று சொல்லி
சொல்லி அழியுங்கள்
தவித்தவாயிற்க்கு தண்ணீர் தராதவனை
என்னுடைய சகோதரன் என்று சொல்லச்  சொல்லி
சகோதர பாசம் கொள்ளச்செய்யுங்கள்
இத்துணை இருந்தும் நாங்கள் அனைவரும்
உரக்கத்தான் சொல்கிறோம்
பாரத் மாதா கி ஜே என்று

தமிழகம் உள்ளடக்கிய அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்



Comments

Popular Posts