பிறந்த நாள்

பிறந்த நாள் கொண்டாடுவது என்பது  கொஞ்சம் சந்தோசமான விஷயம் தான் .ஆனால் கேக் வெட்டி கொண்டாடுவது நம்முடைய வழக்கமா தமிழர் விரோதக்கொள்கை .நாம் அப்படி எல்லாம் செய்வோமா என்றெல்லாம் கேள்வி கேட்பவர்க்கு என்னிடம் பதில் இல்லை .
ஆனால் இது நாள் வரை என்னுடைய அல்லது என் வீட்டில்லோரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது மிகவும் எளியது.காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு செல்வது பின்பு அம்மா செய்து கொடுக்கும் கேசரியை சாப்பிடுவது அவ்வளவு தான் .
திருச்சியில் இருக்கும் வரை ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அங்கு உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வது மட்டுமே எனது வாடிக்கை .இங்கு சென்னையில் அய்யப்பன் கோவில் இருந்தாலும் எனக்கு திருச்சியில் கிடைத்த ஒரு உணர்வு இல்லை .
ஆனால் இந்த பதிவின் நோக்கம் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பற்றியது  இல்லை .என்னுடைய ஜாதகத்தை பற்றியது .
எப்ப ஒருத்தன் உருப்படாம திரியிரானோ உடனே அவனோட ஜாதகத்த எடுத்துகிட்டு ஜோசியர் கிட்ட போய்
என்னாச்சுன்னு கேக்கறது பொதுவா எல்லா குடும்பத்துலயும் உள்ளது தான் .எனக்கும் அப்படி தான் நடந்துச்சு .
அந்த காலத்துல எல்லாம் இந்த கம்ப்யூட்டர் ஜாதகம் எல்லாம் அவ்வளவு பிரபலம் இல்ல .ஒருத்தர் கிட்ட போனோம் .அவர் தம்பி உங்களுக்கு 21 வயசுலேயே கல்யாணம் ஆகிருக்கனுமேன்னு சொன்னார் .எனக்கு மனசுக்குள்ள அடடா மிஸ் பண்ணிட்டமேன்னு நினைச்சுகிட்டு ,கடுப்பா அப்டிலாம் ஒன்னும் நடக்கலன்னு சொன்னேன் .
உடனே அவர் அத தான் சொல்ல வரேன் .அப்படி நடந்து இருந்தா அது சரியா இருக்காதுன்னு சொன்னார் .
உடனே எங்க வீட்ல இந்த ஆளு சரியா சொல்ல மாட்டேங்கிறான் .அதுனால வேற ஒரு ஆள் கிட்ட பார்ப்போம்னு சொன்னங்க .
அடுத்து வேற ஒருத்தர் வேற ஒரு முறை .பாம்பு பஞ்சாங்கம் .இவர் வேற ஒன்னு சொல்லவும் .வேற ஆள்
இப்படியே ஜாதகத்துல எத்தனை முறைகள் இருக்கோ அத்தனை முறையையும் முயற்சி பண்ணி பார்த்தாச்சு .
அடுத்து அகத்தியர் நாடி .எல்லாம் முடுஞ்சு சரி இனிமே ஜாதகமே பார்க்க கூடாதுன்னு ,எங்க வீட்ல ஒரு முடிவுக்கு வந்த பிறகு தான் ,இந்த கம்ப்யூட்டர் ஜாதகம் பற்றி எங்க வீட்டுக்கு தெரிய வந்துச்சு .

அந்த ஜோசியர் சொன்னது தான் இருக்கிறதுலேயே உச்சம் .ஏன்னா நான் இன்னும் பிறக்கவே இல்லைன்னு சொல்லிட்டார் .நீங்க பிறந்த நேரம் ராசி எல்லாம் பார்க்கும் போது நீங்க 23 தேதி பிறக்கல ,24 தேதி தான் பிறந்து இருக்கீங்கன்னு சொன்னார் .

இப்ப சொல்லுங்க நான் பிறந்துட்டனா இல்லையா ?


Comments

  1. எல்லாம் அந்தந்த நேரத்திலே சரியாய் நடக்கும். விடுங்க பாஸ். வாழ்க்கையை போர போக்கிலே அனுபவிச்சுப் போகனும். நம்ப மனக்குழப்பத்த சில பேர் காசு பண்ணப் பாப்பாங்க. ஜோதிடத்தில interpretation ரொம்ப முக்கியம். அது கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் தப்பா தோணும். பிரச்சினையை சந்திச்சா நேரா கடவுளிடம் முறையிடுங்க. அவர் பார்த்துப்பார்.

    நீங்க சொன்ன ஜோதிடர் back calculation போட்டு நடந்ததை வெச்சு ஜாதகம் கணிக்கப் பார்த்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெட்டிப்பேச்சு .நான் இந்த பதிவை ஒரு நையாண்டிக்காவே பதிவிட்டேன் .ஜாதகம் என்பது எவ்வாறு பணம் செய்யும் தொழிலாக மாறி உள்ளது என்பதை உணர்த்தவே என்னுடைய இந்த பதிவு .

      Delete

Post a Comment

Popular Posts