நாம் - சூழ்நிலை

  முன்பு எப்பொழுதோ படித்த மொழிபெயர்ப்பு சிறுகதை .அந்தக்கதையின் நாயகனுக்கு வாழ்வில் பெரிதாக எந்த ஒரு இலக்கோ லட்சியங்களோ கிடையாது .அவனுடைய தேவைகள் என்பது மூன்று வேளை  உணவும் குளிர்காலங்களில் ஒரு வெது வெதுப்பான இடத்தில் தங்குவதே ஆகும் .அதனால் அவன் தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறை சின்ன சின்ன திருட்டுக்களை செய்து அந்நகரில் உள்ள சிறைச்சாலையில் தங்குவதே ஆகும் .
    ஒரு முறை சிறையில் இருந்து விடுதலை ஆகிறான் .வெளி உலகைப்பார்க்கிறான் .அங்கே பறந்து செல்லும் பறவைகளை ,புல் ,பனித்துளி ,இயற்கை எழில் ,சிறுகுழந்தைகளின் சிரிப்பு இவை போன்ற அனைத்து விசயங்களையும் பார்த்து ரசித்து ,இவ்வளவு  சந்தோசமான ஒரு வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று வருந்துகிறான் .
   இனிமேல் நாமும் இதுபோன்று ஒரு வாழ்வு தான் வாழவேண்டும் .ஆனால் இன்னும் சில தினங்களில் குளிர் காலம் ஆரம்பித்து விடும் .அதற்குள் ஒரு இடம் மற்றும் வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருகிறான் .
 முன்பு அவன் சிறையை விட்டு வெளி வரும்போது அவனுடைய நோக்கம் ,ஏதேனும் ஒரு சின்ன திருட்டை செய்து விட்டு இந்த குளிர் காலத்தில் ஒரு சிறையில் தங்குவதே ஆகும் .ஆனால் வெளி உலகை கண்ட பிறகு அவன் மனம் மாறுகிறது .
இது போன்ற சிந்தனையில் இருக்கும்பொழுது அவன் செய்யாத ஒரு திருட்டிற்காக மீண்டும் அவன் சிறைக்கு செல்ல நேர்கிறது .

இதைப்போல் தான் நாமும் இதுவரை போனது போகட்டும் இனிமேல் வேறு வாழ்வு வாழலாம் என்று நினைக்கும் பொழுது சூழல் நம்மை பழைய நிலைக்கே கொண்டு செல்லும் .

Comments

Popular Posts