ஆண் எனும் உடற்கூறு

நெகிழ்ந்த நேசமோ
பெரும் கடுந்துன்பமோ
 எதிர்பார்ப்பற்ற அன்போ
கையறுநிலை இயலாமையோ - அத்தனையையும்
வெளிப்படுத்த ஒரே
ஒரு ஒற்றைத்துளி கண்ணீர் போதுமானதாக இருக்கிறது - ஆனால்
அவையும் முடியவில்லை
ஆண்  எனும் உடற்கூறுக்குள் வாழ்பவர்க்கு

Comments

  1. பாஸ்.. ஆண் அழலாம் பாஸ்.

    நம்ம culture தான் அவனை இப்படியாக்கிருச்சு. ஆனாலும் இப்போதும் ஆண் முடியும்போதெல்லாம் தனிமையில் அழுது கொண்டுதான் இருக்கிறான்.

    இருந்தாலும் நீங்க சொல்ல வர்ரது புரியுது...

    ReplyDelete
  2. மிக்க நன்றி வெட்டிப்பேச்சு .நான் சொல்வது , ஆண் என்னும் அகம்பாவம் கொண்டவர்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. உதைக்கிது பாஸ்.

      "ஒரு ஒற்றைத்துளி கண்ணீர் போதுமானதாக இருக்கிறது - ஆனால்
      அவையும் முடியவில்லை
      ஆண் எனும் உடற்கூறுக்குள் வாழ்பவர்க்கு "

      இங்க "முடியவில்லை" என்பது முயற்சிக்குப் பின்னே வருவது. அகம்பாவம் கொண்டவர்கள் அழ முயற்சிக்கவே மாட்டார்கள். சில சின்னச் சின்ன விசயங்களும் கவிதையின் போக்கையும் நோக்கையும் மாற்றிவிடக்கூடும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

      I hope I am not too critic...

      God bless you

      Delete

Post a Comment

Popular Posts