செவளைக்குட்டி

புதிதாய் பிறந்த செவளை ஆட்டுக்குட்டியை
தனதென்று வளர்த்தாள்
பல்லயத்தில் இனம் காண
தன் சீட்டி பாவடையில் கயிறு திரித்து
கழுத்திலும் காலிலும் கட்டி வைத்தாள்
மேய்ச்சலுக்கு போகும் பொழுதும்
தன் கையினாலேயே பசுந்தலைகளை ஊட்டி விட்டாள்
கோவில் கொடைவரை அவள் வீட்டு பெரிய ஆம்பிளை
சொல்லவே இல்லை - அந்த
செவளைக்குட்டி தான்
குல உயிர் காக்கும் அய்யனாருக்கு
நேர்ந்து விட்டதென்று

Comments

  1. நெஞ்சைத் தொடுகிறது.

    "பல்லயத்தில் இனம் காண
    தன் சீட்டி பாவடையில் கயிறு திரித்து
    கழுத்திலும் காலிலும் கட்டி வைத்தாள்"

    அழகு... அருமை...

    ReplyDelete
  2. அருமை அருமை
    சொல்லிச் சென்றவிதமும் முடித்த விதமும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி Ramani S அய்யா

    ReplyDelete

Post a Comment

Popular Posts