நினைவில் உள்ள வீடு
 புதிதாய் வாங்கும் 
சீப்பு கண்ணாடி மேசை நாற்காலி 
இன்னபிற பொருட்களை 
வாங்கும் பொழுது - இது 
நம்ம வீட்ல இருந்தது மாதிரியே இருக்கு இல்லப்பா 
என்று மெல்லிய புன்னகையுடன் சொல்லும் அம்மா 
இதுவரை 
எப்பெரும் மாளிகையையும் - இது 
நம்வீடு போன்று உள்ளது என்று சொன்னதே இல்லை 
மிகப்பெரும் கலவரத்தில் வீடிழந்து 
பரதேசம் வந்த பிறகு 
பட்டென்று வலியைக் கொண்டு வருகிறது நெஞ்சுக்குள்.
ReplyDeleteGod Bless you
மிக்க நன்றி வெட்டிப்பேச்சு .நான் இந்த பதிவிற்கு தான் உங்களுடைய கருத்தை எதிர்பார்த்தேன் .மீண்டும் நன்றி
ReplyDelete