மொழி பெயர்ப்பாளனாக நான்
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில்
என்ன சொல்கிறான் என்றார்
வரம் கேட்கிறான் என்றேன்
முடியாது என்று சொல் என்றார்
பின் என்ன என்றார்
அடம் பிடிக்கிறான் என்றேன்
என்ன செய்யலாம் என்றார்
ஆலோசனை சொன்னேன்
சிறிது சிறிதாக
நான் கடவுளாகவும் கடவுள் நானாகவும்
மாறிக்கொண்டு இருந்தோம்
Comments
Post a Comment