மழலை

நாம நடந்தா நம்ம பின்னாடியே வருதில்ல இந்த நிலா , அது ரொம்ப நாளா white கலர்லேயே இருக்கு.
நாம கலர் பென்சில் எடுத்துட்டு போய்  yellow கலர் ,green கலர் எல்லாம் paint பண்ணுவமா ?

சரி எப்படி போறது ?

தம்பியோட ஹெலிகாப்டர் எடுத்துட்டு போவோம் .

சரி அங்க போய் ஹெலிகாப்ட்டர் ரிப்பேர் ஆகிடுச்சுனா ?

பெவிகால் ,கம் எல்லாம் கொண்டு போவோம் .ஒட்டி ஹெலிகாப்டர சரி பண்ணி கொண்டு வந்துடுவோம்

# இது எனக்கும் ,எங்க வீட்டு வாண்டுக்கும் நடந்த உரையாடல் .இதில் நிலாவுக்கு பெயிண்ட் பண்ண முடியுமா ,ஹெலிகாப்டர்ல போக முடியுமா ,ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆனா fevicol வச்சு ஒட்டி கொண்டு வர முடியுமா
என்று உங்கள் பகுத்தறிவு வேலை செய்தால் ,மன்னிக்கவும் நீங்கள் உங்கள் குழந்தைமையை இழந்துவிட்டீர்கள் .

அவ்வாறு இல்லாமல் ரசித்தால் , இன்றும் உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம் .

Comments