இந்த காலத்துல எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க

ஒரு வாரத்திற்கு முன் கரூரில் வாடகைக்கு வீடு பார்க்கசென்ற என் அனுபவம் .

தம்பி நீங்க  திருச்சில இருந்து வர்றேன்னு சொல்றீங்க .உங்க அவசரத்துக்கு ஒரே ஒரு வீடு மட்டும் தான் கைல இருக்கு .ஆனா அந்த வீட்டுக்காரர் அவங்க ஆளுங்களுக்கு மட்டும் தான் வீடு தருவார் .நான் சொல்ற மாதிரி சொன்னீங்கன்னா அந்த வீட்ட பேசி முடிச்சிரலாம் .என்ன சொல்றீங்க என்றார் வீட்டு ப்ரோகர் .

ஏங்க பத்தாயிரம் வாடகை ,ஒரு லட்சம் அட்வான்ஸ் குடுக்கப்போறேன் .அவங்க ஆளுங்களுக்கு தான் குடுக்குறேன்னு அவர் சொன்னா அவங்க ஆளுங்களுக்கே வீடு குடுதுக்கட்டும் .காசையும் குடுத்துட்டு நான் ஏன் பொய் சொல்லிட்டு இருக்கணும் என்றேன் .

தம்பி நமக்கு இப்ப வேற வழி கிடையாது .நீங்க வாங்க நான் பேசிக்கிறேன் என்றார் ப்ரோகர்

சரி என்ன தான் நடக்கும் பார்க்கலாம் என்று நானும் கிளம்பினேன் அவரோடு .வீடு ஓனரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ப்ரோகர்.

தம்பி ,நீங்க என்ன ஆளுங்க என்றார் வீட்டு ஓனர் .அவர் குறிப்பிட்ட வகுப்பை சொல்லி அதுவா என்றார் .அதோடு நீங்க ஊராலியா இல்ல கொங்கா என்றார்.பொதுவாக திருச்சி போன்ற ஊர்களில் தன வகுப்புக்கு முன் சோழியன் என்று சேர்த்து கொள்வது வழக்கம் .இந்த கரூர் கொங்கு மண்டலம் .அதனால் நானும் கொங்கு என்றேன் .

உடனே அவர் என்ன கூட்டம் ,என்ன பிரிவு என்றார் .எனக்கு தெரிந்தால் தானே நான் சொல்வதற்கு .அதோடு மனதிற்குள் இன்னும் பயிற்சி தேவையோ என்று சொல்லிக்கொண்டு ,என்னங்க நீங்க வீடு தானே பாக்க வந்தேன் .இத்தன கேள்வி கேக்குறீங்க .என் ஊர்லலாம் இது மாதிரி ஒருத்தனும் கேட்டது இல்ல அதோடு நான் பிறந்ததுல இருந்தே டவுன்ல இருக்கேன் .எனக்கு அதெல்லாம் தெரியாது .அப்பாவ கேட்டா தான் தெரியும் என்றேன் (உண்மையில் திருச்சியில் யாரும் வெளிப்படையாக கேட்பதில்லை )

தம்பி தப்பா எடுத்துக்காதீங்க .அந்த சாதிக்காரங்க எல்லாம் வீடு கேட்டு வர்றாங்க .அவங்கள சரிசமமா வைக்க முடியுமா சொல்லுங்க .அதான் இவ்ளோ பணம் கேக்குறேன் என்றார் ஓனர் .

சரிங்க நான் உங்க ஆளுங்க தான் .அட்வான்ச கொஞ்சம் கொரச்சுகொங்க .வாடகை அதே குடுத்துடுறேன் என்றேன் .

அது முடியாது தம்பி .என்ன தான் தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயுரும் வேற என்றார் .

பதிலுக்கு நான் சரி சென்னையில் எல்லாம் வாடகை பத்திரம் என்று எழுதி கொடுப்பார்கள் .அது மாதிரி ஏதும் கொடுப்பீங்களா என்றேன் .

அப்டில்லாம் தர முடியாது .இஷ்டம்னா இருங்க இல்லைனா வேண்டாம் என்றார் .

நானும் உங்க வீடு வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தேன் .

பின் குறிப்பு :இந்த காலத்துல எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க


Comments

  1. மண்டைல குட்டுற மாதிரி எதாவது சொல்லிட்டு வந்திருக்கலாம். காசுல கொஞ்சம் குறைச்சுக்க மனசில்ல. சாதிப்பாசம் மட்டும் கேக்குதோ!!??

    ReplyDelete
    Replies
    1. அந்த மாதிரி ஆளுங்க கிட்ட பேசுறது வீணுங்க .அதான் பேசாம வந்திட்டேன்

      Delete
  2. ஒரு வேளை, வீட்டையும் கொடுத்து கூடவே அவர் பொண்ணையும் கொடுக்கலாம்னு நினைச்சி தான் இவவளவும் கேட்டாரோ என்னமோ.... :)

    ReplyDelete
  3. பிரான்ஸில் யாருக்காவது பெண் கெட்டுப் பாருங்கள்.
    சாதி எப்படி தலைவிரிதாடுகிறது என்று தெரியும்.

    ஆனால் வீட்டு வாடகைக்கும் இப்படி என்றால்.. சிரிக்கத் தான் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பிரான்சில் தீண்டாமையோ மற்றோ கலவரங்களோ இருக்காது என்று நம்புகிறேன் .முக்கியமாக சென்னை தவிர்த்து தமிழகத்தின் அத்துனை மாவட்டங்களிலும் இதே நிலைமை தான்

      Delete
    2. மன்னிக்கவும் மனவெளி.

      பிரான்சில் வாழும் தமிழர்களை மட்டுமே சொல்ல வந்தேன்.

      Delete
  4. நல்லது அருணா செல்வம் அவர்களே

    ReplyDelete
  5. நம் தமிழர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் சாதி பார்க்கப்படுகிறது

    ReplyDelete

Post a Comment

Popular Posts