புகைப்படம்

சிறு தூறல் மழையில் நனைந்து
மெல்லியதாக தலை கேசம் துவட்டும் பொழுதும் -ஏதேனும்
புது இடம்
புது நதி
புது நண்பன்
புதிய பொருள்
இவை அனைத்தும் வாய்க்கப்பெறும் பொழுதும் -எப்பொழுதுமே
ஓர் புகைப்படம் எடுத்து ரசித்துக்கொள்வாய் - ஆனால்
மிகப்பெரும் சாலை விபத்தில் சிக்கி சிதறுண்ட பொழுது
அனைத்து நாளிதழ்களிலும் வந்த
உன் புகைப்படத்தை மட்டும் ரசிக்கத்தான் நீ இல்லை

Comments

Popular Posts