வேலையற்றவனின் கொடும் பொழுதுகளில்
தெரு ஒரப் பிச்சைக்காரன்
குபேரனாய்த் தெரிவார்
உண்ணும் உணவு
தொண்டைக்குழிக்கும்
இரைப்பைக்கும் இடையே
நரகலாய் நகரும்
நெருங்கிய நண்பனின் சிறு
அதட்டல் அறிவுரையாய்த் தோன்றும்
நீண்ட நேரம் பேசியும் உதவிக்காக ஏங்கும் மனம்
தன்மானத்திற்கும் வயிற்றுக்கும் இடையே
சண்டை போடும்
கலை ,இலக்கியம் அனைத்தும்
வெற்று வேலையற்ற செயலாய்த்தோன்றும்
மார்க்ஸ் ,உழைப்புச்சுரண்டல் அனைத்தும்
கண் முன்னே தோன்றி மறையும்
ஒட்டு மொத்த உலகும் இன்பாமாயும்
தானொருவன் மட்டுமே உழள்வாதாயும்
உள் மனது கூக்குரலிடும்
பொய் களவு புனிதமாய்த் தெரியும்
கற்ற கல்வி காலணாவுக்குக்
காணாது எனும் ஞான ஒளி பிறக்கும்
இரத்தலை விட இறத்தல்
சாலச்சிறந்தது என்று எண்ணும் பொழுதே
இன்னும் ஒரு முயற்சி செய்துபார்க்கலாமே
என்றும் தோன்றும்
வேலையற்றவனின் கொடும் பொழுதுகளில்
குபேரனாய்த் தெரிவார்
உண்ணும் உணவு
தொண்டைக்குழிக்கும்
இரைப்பைக்கும் இடையே
நரகலாய் நகரும்
நெருங்கிய நண்பனின் சிறு
அதட்டல் அறிவுரையாய்த் தோன்றும்
நீண்ட நேரம் பேசியும் உதவிக்காக ஏங்கும் மனம்
தன்மானத்திற்கும் வயிற்றுக்கும் இடையே
சண்டை போடும்
கலை ,இலக்கியம் அனைத்தும்
வெற்று வேலையற்ற செயலாய்த்தோன்றும்
மார்க்ஸ் ,உழைப்புச்சுரண்டல் அனைத்தும்
கண் முன்னே தோன்றி மறையும்
ஒட்டு மொத்த உலகும் இன்பாமாயும்
தானொருவன் மட்டுமே உழள்வாதாயும்
உள் மனது கூக்குரலிடும்
பொய் களவு புனிதமாய்த் தெரியும்
கற்ற கல்வி காலணாவுக்குக்
காணாது எனும் ஞான ஒளி பிறக்கும்
இரத்தலை விட இறத்தல்
சாலச்சிறந்தது என்று எண்ணும் பொழுதே
இன்னும் ஒரு முயற்சி செய்துபார்க்கலாமே
என்றும் தோன்றும்
வேலையற்றவனின் கொடும் பொழுதுகளில்
"இரத்தலை விட இறத்தல்
ReplyDeleteசாலச்சிறந்தது என்று எண்ணும் பொழுதே
இன்னும் ஒரு முயற்சி செய்துபார்க்கலாமே
என்றும் தோன்றும்"
பின்னிட்டிங்க பாஸ்!
மிக்க நன்றி வெட்டிப்பேச்சு
Delete