கனவு

இதழோடு இதழ்
வைத்து அன்பை பரிமாறி
மடி மீது தலை வைத்து
பல கதைகள் பேசி
ஆள் அரவமற்ற
தனி தீவில் கை பிடித்து
நடக்கையில் மீசையில்
இருந்த ஒரு நரை முடி
குத்தி கனவு கலைந்தது
அன்பு கிடைக்க பெறாத
அழகற்ற கூணனின்
கனவு

Comments