ஓல்ட் இச் கோல்ட்

வெளியூரில் படித்துவிட்டு ஊருக்கு வந்த மகனும் தந்தையும் உணவு அருந்த அமருகிறார்கள்
தந்தை மகனிடம் "நீ என்னப்பா படிக்கிறாய் ?
மகன் " நான் தர்க்கசாத்திரம் படிக்கிறேன்
அப்பா "அப்படி என்றால் ?
மகன் அவர்கள் முன்னால் உள்ள மீன்களை காட்டி இங்கே எத்தனை மீன்கள் உள்ளன என்று
கேட்கிறான் .தந்தை இரண்டு என்று பதில் அளிக்கிறார் .
மகன் "இதில் மூன்று மீன்கள் உள்ளன என்று வாதிடுவதே தர்க்கசாத்திரம்" என்று விளக்குகிறான் .
தந்தை "சரி நான் ஒரு மீனை சாப்பிடுகிறேன் ,உன் அம்மா ஒரு மீனை சாப்பிடட்டும் .மூன்றாவது மீனை நீ சாப்பிடு என்றார் .
ஓல்ட் இச் கோல்ட்

Comments

Popular Posts