இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள்

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் .
சுஜாதாவின் எழுத்துக்களை படிக்கும்  பொழுது ஒரு வித துள்ளல் ,காலத்திற்கேற்ற படி அவருடைய நடை நக்கல் எல்லாம் இருக்கும்.

விஞ்ஞானம் என்றால் காட்டில் வாழும்  ஏதோ ஒரு ஜடாமுனி சித்தர் செய்யும் சாகசம் சம்பந்தப்பட்டது என்று பெரும்பாலானவர்களின் எண்ணத்தை அகற்றி ,அதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல ,சின்ன பிள்ளைங்க குச்சி மிட்டாய் சாப்பிடற மாதிரி இலகுவான விஷயம் தான் என்று எளிமை படுத்தி எல்லோருக்கும் புரியும் வகையில் கதை சொல்லும் பாணி அவருக்கு மட்டுமே உரித்தது .

அவருடைய நாவல்களில் நான் அதிகம் ரசித்தது "ஆதலினால் காதல் செய்வீர் ".அதுமட்டும் இல்லாமல்
சினிமாவிலும் அவருடைய வசனங்கள் நய்யாண்டி வகையை சேர்ந்தது .

அந்நியன் படத்தில் வரும் வசனம் ,விக்ரம் சொல்வார் " நான் பூச்சி சீனிவாச அய்யங்கார் பேரன் "என்று ,அதற்க்கு மறுபுறம் இருப்பவர் சொல்வார் "பூச்சி கீச்சிளாம் அந்த காலம் ,இப்ப புதுசா
டைனோசர் மணின்னு ஒருத்தர் பாடுறாருன்னு" .

அதைப்போன்று "பெண்கள் மாநகர பேருந்தில் இடிபடாமல் போகவேண்டும் என்றால் "incubator "ல  தான்போகணும் என்பன போன்ற வசனம் அனைவரையும் ரசிக்க வைப்பவை .

இவருடைய படைப்புகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் .ஆனால்
அவருடைய ஒரு கருத்து மட்டும் மறக்கமுடியாதது .

ஒரு படைப்பு என்பது படித்த உடன் வாசகனின் மனதில் நின்றால் மட்டுமே அது சிறந்த படைப்பு .அவ்வாறு
பதிய வில்லை என்றால் அது வெறும் bus ticket .

இவருடையவை எல்லாம் சிறந்தவை அதனால் தான் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்



Comments

Popular Posts