வடலூரானின் கால் தூசி

தோள் தடவி பூணூல் 
உணரும் இடுகாடு காக்கும் 
சிவனாரின் மைந்தனாகவோ 

ஒரு இனக்குழுவில் பிறந்து 
வேற்றோர் இனம் அமைத்த 
அன்னை மரியின் சிறு ஆட்டுக்குட்டியின் 
உணர்வாகவோ 

பிறை நிலா போற்றும் 
ஸல் நபியின் உயிராகவோ

ஆசையே அழிவிற்கு அடித்தளம்
என்று உணர்த்திய நிர்வாணம்
போற்றிய கௌதமனின்
பிச்சை பாத்திரமாகவோ

இருப்பதில் என்றுமே விருப்பம் இல்லை

வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம்
வாடிய வடலூரானின்
கால் தூசியாகவே
இருப்பர்தர்க்கு ஏங்கிய மனம்
இருக்கும் இடம் தேடி அலைந்ததில்
காணக்கிடைத்தது
காணொளி விளம்பரம் ஒன்று
சென்னைக்கு மிக அருகில்
செவ்வாய் கிரகத்தில் என்று

இருப்பினும் ஒரே ஒரு
சந்தேகம் அங்கேயும் மனிதன் கண்டெடுத்த நிலம் தானே என்று
புறந்தள்ளி மௌனத்தில்
மயானமாய் ஆனது மனம் .

Comments