நாம்

ரொம்ப நாள் கழிச்சு என் பட்டய (diploma) கால நண்பனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .குடும்பம் நண்பர்கள் பற்றி எல்லாம் பேசி முடித்த பிறகு நீ என்ன செய்ற என்றான் .நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனில குவாலிட்டி அனலிஸ்டா (quality analyst) இருக்கேன் அப்டின்னு சொன்னேன் .(பெரிய கம்பெனியா இருந்து இருந்தா கம்பெனி பெற பெருமையா சொல்லி இருக்கலாம் )

உடனே அவன் இந்த டெவெலபெர்(developer) பசங்க கஷ்டப்பட்டு செஞ்ச வேலைய அது சரி இல்ல இது சரி இல்லன்னு சொல்ற வேலை தானே அப்டின்னு ,கேட்டுட்டான் .

நானும் ஒரேடியா அப்டி சொல்லமுடியாதுன்னாலும் ஓரளவுக்கு அப்டி தான்னு வச்சுக்கன்னு சொல்லி முடிச்சேன்

ஏண்டா குத்தம் கண்டுபிடிக்கிரதுளாம் ஒரு வேலையா அப்டின்னான் .நான் இல்ல தரத்த குடுக்கனும்னா இந்த வேலை அவசியம் அப்டின்னு சொல்லி முடிச்சேன் .

ஆனால் நம் வாழ்வில்,நம்முடைய எண்ணங்களை மற்றவர் யாவரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் நாம் ,மற்றவர்களுடைய உணர்வுகளுக்கோ செயல்களுக்கோ எந்த குற்றம் குறை சொல்லாமல் ஏற்றுக்கொண்டு இருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும் .

இது தான் மனித இயல்பாக உள்ளது .

இந்த நேரத்தில் முன்னாள் படித்த சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது .
ஒரு ஓவியன் ஒரு சிறந்த ஓவியத்தை வரைந்து விட்டு அதன் அருகில் இந்த ஓவியத்தில் குறை இருந்தால் இங்கே குறிப்பிடவும் என்று குறிப்பிட்டு இருந்தானாம் .

ஒரே நாளில் பல ஆயிர குறைகள் குறிப்பிடப்பட்டு இருந்ததாம் அந்த சின்ன ஓவியத்திற்கு . மிகவும் மனம் வருந்தி அடுத்த நாள் இங்கே இந்த ஓவியத்தில் குறை எழுதியவர்கள் இந்தஓவியத்தில் உள்ள குறையை சரி செய்யலாம் என்று வேறு ஒரு குறிப்பை எழுதி வைத்தானாம் .

ஆனால் யாரும் தான் சொன்ன குறையை அந்த ஓவியத்தில் நிவர்த்தி செய்ய வரவில்லையாம்.

இதன்மூலம் குறை சொல்பவர்கள் ஆயிரம் பேர் வருவார்கள் .ஆனால் நீங்கள் அதை சரியாக செய்யுங்கள் என்று சொன்னால் யாரும்வர மாட்டார்கள் .அதனால் நாம் நம்முடைய வேலையை செய்வோம் யார் குறை சொன்னாலும் .




Comments

Popular Posts