வாரிசில்லா ராஜ்ஜியத்தில்
மகுடம் சூட்டிக்கொண்டதுபோலவும்
அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் என்றும்
இந்த கால பசங்க எல்லாம் என்றும்
நொடிக்கு ஒரு முறை அறிவுரையும்
கண்ணாடி உண்மையிலேயே
நம்மை தான் பிரதிபலிக்கிறதா என்றும் -மனதின்
ஓரத்தில் எண்ணம் சுழன்று அடித்து கொண்டு இருந்தால்
நிச்சயமாக நீங்கள் வயதானவர் தான்
Comments
Post a Comment