முண்டம்

சிகை கேசம் திருத்தும் பொருட்டு 
செம்மொழி பேசும் ஆடியுடன் 
கிடைத்ததொரு வாய்ப்பு 

முழுமை நிரப்பாமல் 
முண்டத்துடன் பிரதிபலித்து 
முடித்ததன் கடமையை .

ஏனென்று விசாரிக்கையில் 
கொலை தொழில் செய்கையில் குரூர முகம் 
குழந்தையுடன் உரையாடுகையில் குதூகல முகம்
வஞ்சம் தீர்க்கையில் ஓநாய் முகம்
சுயலாபம் நினைக்கையில் சுயமரியாதை இழந்த முகம்
அத்தனையும் இழக்கையில் அநாதரவான முகம்
இதில் எந்த முகத்தை பிரதிபளிக்கட்டும் என்றது .



Comments

Popular Posts