பெரியோர்க்கு


பெருங்கூட்ட நெரிசலில் 
பெண் கசங்கும் உடை நழுவும் 
காம பார்வையிலும் 
இணை தேடி இணையும் தெரு ஒர நாயை கல் வீசி பிரிக்கையிலும் 
அதிதிக்கு அன்னம் இல்லை என்று கதவறைந்து சாற்றுகையிலும் 
கொடுங்கொலை புரிய கூர்வாள் 
வீசுகையிலும் 
எப்பொழுதேனும் வழித்தெழழாம் 
உங்கள் மனசாட்சி -அவ்வாறு எழின்
தடிகொண்டு அடித்து துவழ செய்யுங்கள்
ஏனெனில் அவை தேவையில்லா உள் உணர்ச்சி



Comments