போதிமரம்

மலரும் நினைவாக 
பல நூறு ஆண்டுகளுக்குப்பின் 
தான் ஞானம் பெற்ற 
போதிமரத்தை காண 
ஆர்வமாய் வந்தான் புத்தன் 
நான்கு வழி சாலையில் 
என்றோ காணாமல் போயிருந்தது 
போதிமரம்


Comments

Popular Posts