கடவுளும் நானும்
நீண்டதொரு முயற்சிக்குப்பின்
தொடர்பில் கடவுள்
அவரிடம் நான் ...
நிரம்பிய அன்பும் நீங்காத கருணையும்
மாசற்ற ஒழுக்கமும் ..
துரோகிக்கும் நன்மையே செய்யும்
மனமும் உடையவனாய் இருப்பினும் எனை
ஏமாளி கையாலாகதவன் வெற்றுவேட்டு
என்றே அனைவரும் பழிக்கிறார்கள்
என் செய்வது என்றேன் .
பலமணிநேர மௌனத்திற்கு பிறகு
என்னுடன் வந்துவிடு
நான் தனியனாய் தான் இருக்கிறேன் என்றார் .
Comments
Post a Comment