ஆயுதம்
நல்லது வேரறுக்க
துரோகம் கைகொள்ள
அப்பாவி குடியழிக்க - தேவை ஓர்
நல்லாயுதம்
அது
தன தாய் தலை கொய்த -பாச
பரசுராமனின் கோடாரியை விட
கருணை உள்ளதாயும்
மறைந்திருந்து தாக்கிய
ராமனின் அஸ்திரத்தை விட
சுயநலமுள்ளதாயும்
வயோதிக பீஸ்மனை
அம்பு படுக்கையில் சாய்த்த
அர்ஜுனனின் அம்பை விட
வீரமானாதாயும்
கிடைக்கப்பெறவேண்டும்
முடிவில்லா பெருந்தேடலில்
கிடைக்கபெற்றது முக்காலமும்
போற்றிடும் அற்புத ஆயுதம்
அது
கருமானின் உலையில் செய்யப்படாதது
நெருப்பில் வார்க்கப்படாதது
எக்கை பயன்படுத்தாதது
இதோ என்னிடமே உள்ளது
கருணை அற்றதும்
சுயநலமுள்ளதும்
கொடூரமானதும்
என் நா
இதை விட என்ன ஆயுதம் - வேணும்
எவரையும் அழிக்க
துரோகம் கைகொள்ள
அப்பாவி குடியழிக்க - தேவை ஓர்
நல்லாயுதம்
அது
தன தாய் தலை கொய்த -பாச
பரசுராமனின் கோடாரியை விட
கருணை உள்ளதாயும்
மறைந்திருந்து தாக்கிய
ராமனின் அஸ்திரத்தை விட
சுயநலமுள்ளதாயும்
வயோதிக பீஸ்மனை
அம்பு படுக்கையில் சாய்த்த
அர்ஜுனனின் அம்பை விட
வீரமானாதாயும்
கிடைக்கப்பெறவேண்டும்
முடிவில்லா பெருந்தேடலில்
கிடைக்கபெற்றது முக்காலமும்
போற்றிடும் அற்புத ஆயுதம்
அது
கருமானின் உலையில் செய்யப்படாதது
நெருப்பில் வார்க்கப்படாதது
எக்கை பயன்படுத்தாதது
இதோ என்னிடமே உள்ளது
கருணை அற்றதும்
சுயநலமுள்ளதும்
கொடூரமானதும்
என் நா
இதை விட என்ன ஆயுதம் - வேணும்
எவரையும் அழிக்க
Comments
Post a Comment