எங்கள் ஊர்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறது
எங்கள் ஊர்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
எங்கள் ஊர் கிழவர்கள்
விதைத்து விட்டு வானம் பார்த்து
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
கரும்பு கொல்லையிலும் பம்பு செட்டிலும்
ஒளிந்து காதலிக்கும் காதலர்கள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
நான் அவன்டா என்று மீசை முறுக்குபவர்கள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறது
இருவேறு சுடுகாடுகள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்
எங்கள் ஊர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பொய் சொல்லிக்கொண்டு
இன்றும்
அப்படியே தான் இருக்கிறது
எங்கள் ஊர்
அப்படியே தான் இருக்கிறது
எங்கள் ஊர்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
எங்கள் ஊர் கிழவர்கள்
விதைத்து விட்டு வானம் பார்த்து
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
கரும்பு கொல்லையிலும் பம்பு செட்டிலும்
ஒளிந்து காதலிக்கும் காதலர்கள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்கள்
நான் அவன்டா என்று மீசை முறுக்குபவர்கள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறது
இருவேறு சுடுகாடுகள்
இன்றும்
அப்படியே தான் இருக்கிறார்
எங்கள் ஊர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பொய் சொல்லிக்கொண்டு
இன்றும்
அப்படியே தான் இருக்கிறது
எங்கள் ஊர்
Comments
Post a Comment