நாட்குறிப்பு

பால்ய கால பள்ளிக்கூட சேட்டைகள் 
பதின் பருவ இயற்கை வேட்கைகள் 
கல்லூரிக்குறும்புகள் 
பால் கணக்கு 
தயிர் கணக்கு 
இவை அனைத்தையும் 
எழுதி வைத்திருக்கும் அப்பா ..

ஒரு பக்கத்தில் மட்டும்
ஒற்றை எழுத்தையும்
காய்ந்து போன கண்ணீரையும்
இட்டு நிரப்பி இருக்கிறார்.

ஒரு வேளை அவ்வெழுத்து அவரது
முன்னாள் காதலின் சுவடாககூட இருக்கலாம் .

ஆனால் எங்கு தேடியும்
அம்மாவின் நாட்குறிப்பு மட்டும்
கண்ணில் படவே இல்லை
ஆவணப்படுத்தலும் ஆண்களுக்கே உரித்தவை போலும்

Comments