ஜடாமுடி ஆசாமி

ஊருக்குள் புதிதாய் வந்து 
சேர்ந்த ஜடாமுடி ஆசாமியினால் 
உருவாகியது ஓர் சேதி 
இவன் 
இமயமலை சாரலில் எம் இறைவனுடன் 
இயைந்து இருந்தவன் 
உலகை உய்விக்க கீழிறங்கி வந்தவன் என்றும் 

இவன் 
கொடும் கொலை செயல் புரிந்து 
காவலன் கன்னிக்கு தப்பியன் என்றும்

இவன்
அனைத்தும் இழந்து மகவு மக்களால்
புறக்கநிக்கபட்டவன் என்றும்

இவன்
உழைப்பை மறந்து ஊர் வாய் உண்பவன் என்றும்

உலவியது ஓர் ஓர் வாய் வழி

அனைத்தும் அறிந்திட
அமைதியாய் காத்து நின்றது ஊர்
அவனின் அருள் வாக்கிற்க்கோ
திருவாய் மொழிக்கோ

இத்தனை கலவரத்தில் அவன் அவசர வேலை என்று
சொர்கதிற்க்கோ நரகதிர்க்கோ போய் நின்றான்




Comments

Popular Posts