தேடல்

உச்சி முதல் 
உள்ளங்கள் வரை 
தொடங்குது ஒரு தேடல் 
நுகர்ந்தும் ஸ்பரிசித்தும் 

தேடல் இலக்கோ 
தேடு பொருள் அன்றியோ 
தொடர்ந்தே நகர்கிறது 

எதை பெற்றோம் 
எதை இழந்தோம்
எதுவென்றே அறியாமல்
இயங்கினோம்

இறுதியில் பெற்றோம்
இதுவல்ல என்று மெல்ல நகைத்து
மீண்டும் தொடர்கின்றோம்
மீண்டுமொறு தேடலை

இல்லாத இலக்கொன்றை
இருவருமே அடைந்திட்டோம்
செம்மொழி வார்த்தையில் அடைபடாத
பரமானந்தத்தை

எவன் சொன்னான் இவை சிற்றின்பம் என்று

Comments

Popular Posts