அவன்

மேடையில்
அவரவர் விருப்பங்கள்
அழகியல் கவிதைகளாய்
படைப்பாளிகளின் வாயிலாக
தரையில்
வெய்யிலுக்கு பந்தலில் ஒதுங்கியவன்
காற்று கலைத்த ஆடை ரசிப்பவன்
சுண்டல் ,சுக்கு காப்பி விற்பவன்
இவர்களுடன்
நாகரீகம் தெரியாமல்
ஒரு ஒரு வார்த்தைக்கும்
கை தட்டி ஆரவாரிப்பவன்



Comments

Popular Posts